மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஏமாந்து நின்றீர்களோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் ஆகி விடுவீர்கள். தெளிவு பிறக்கும் நாள் இன்று. உறவுகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி, நிம்மதி இருக்கும். தேவையற்ற தொல்லைகள் சந்தேகங்கள் உங்களை விட்டு விலகும். எதிரி பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்களை விட்டுச் சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும், உங்களை வந்து சேருவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் தேடி வரும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கெட்ட பெயர் மாறும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பயணங்களால் நன்மை உண்டு.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெருமையான நாளாக இருக்கும். தலைகுனிந்த இடத்தில், தலைநிமிர்ந்து நிற்பீர்கள். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். மனதிற்கு பிடித்த நபரோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். நீண்ட நாள் மன பாரம் குறையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாளை என்ஜாய் பண்ணி கழிக்க போகிறீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்கள் உயர் கல்விக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும். காரிய தடை விலகும். சுப காரிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் ஒற்றுமை நிலவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று ஜெயம் உண்டாகும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வியாபார விருத்தி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அதிக வேலை பளுவை எடுத்து தலையில் போட்டுக்கொள்ள கூடாது. உடல் சோர்வு அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவ செலவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. அடமானத்தில் வைத்த நகைகளை, சொத்து பத்திரங்களை மீட்பதற்கு உண்டான வழி பிறக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் துவங்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன நிம்மதி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உங்களுடைய தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். எதிரிகளைக்கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வித்தையை வெளிப்படுத்துவீர்கள். நல்லதே நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்களை பேசிப்பேசியே சாதித்துக் கொள்வீர்கள். வசீகர தோற்றமும், பேச்சாற்றலும் உங்களை இன்று உயர்ந்த இடத்தில் வைக்கப் போகிறது. திறமை வெளிப்படும். இந்த நாள் உற்சாகம் நிறைந்த நாள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். மேலும் நன்மைகள் நடக்கும்.
Tags:
Rasi Palan