யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு விவாக பதிவாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, நல்லூர் பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களில் நிலவும் குறித்த பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
இந்த பதவிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
