மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். சேமிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் தேவை. ஏமாற்றத்தை கண்டு துவண்டு போகக்கூடாது. விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சுறுசுறுப்பாக செயல்படுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களது கை ஓங்கி நிற்கும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். எதிரி பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சுபசெலவர்கள் ஏற்படும் நாள் இன்று.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். பல நாள் மன குழப்பம் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளுடைய நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் நல்ல பலன்கள் உங்களை வந்து சேரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வேலை வியாபாரம் எல்லாம் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். புது மனிதர்களின் அறிமுகம், புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் உங்களை வந்து சேரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான அளவு ஓய்வு வேண்டும். எல்லா வேலையையும் தலையில் இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நேரத்திற்கு நல்ல தூக்கம் தேவை.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று யோகக்காரர்களாக வலம் வரப்போகிறீர்கள். உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். அந்த அளவுக்கு உங்களுடைய வசீகரத் தோற்றம் வெளிப்படும். திறமை வெளிப்படும். பேச்சாற்றல் வெளிப்படும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சொத்து பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று காரிய தடைகள் விலகும். நீண்ட நாள் முயற்சி செய்த தோல்வி அடைந்த ஒரு விஷயத்தில் நிச்சயம் என்று வெற்றி காண்பீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சொத்து சுகம் வாங்குவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். நீண்ட நாள் பஞ்சாயத்துகள் ஒரு முடிவுக்கு வரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்தையும் சுறுசுறுப்பு இருக்காது. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். இருப்பினும் பெருசாக பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். நல்லதே நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நிம்மதியாக இருப்பீர்கள். உங்களுடைய வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடந்து முடியும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். நிதிநிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரலாம். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
Tags:
Rasi Palan