இன்றைய ராசிபலன் - 13.07.2026..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்வது நன்மையை தரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யும் மனப்பான்மை வெளிப்படும். நீண்ட நாள் பகை விலகும். குடும்ப உறவுகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். இரவு நிம்மதியான தூக்கத்தையும் பெறுவீர்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சிக்கலாம். வேலையில் நிதானத்தோடு செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். செலவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உங்களுடைய பிரச்சனைகள் சரியாகும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டம் லாபமாக மாறும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரி தொல்லை விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுலபமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கொடுத்த வாக்கை சரியான நேரத்தில் காப்பாற்றி விடுங்கள். இல்லை என்றால் வாக்கு கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மலிவான விலையில் பொருட்கள் கிடைப்பதாக இருந்தால், அதனுடைய தரத்தையும் சோதித்து பார்ப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களை நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனம் இருக்கட்டும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். நல்ல நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். இறைவழிபாடு செய்யுங்கள். மனதில் இருந்த தேவையில்லாத சஞ்சலங்கள் நீங்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பெயர் புகழ் பாராட்டு என்று நிறைய நல்ல விஷயங்கள் உங்களை தேடி வர போகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. பயணங்களால் மன நிறைவு உண்டாகும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் வைத்திருந்த வேலைகளை எல்லாம், இன்று செய்து முடிப்பீர்கள். மனநிறைவை அடைவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். மனபாரம் குறையும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படக் கூடிய நாளாக இருக்கும். மனதில் தேக்கி வைத்திருந்த விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். தேவையில்லாத விஷயங்களை அனாவசியமாக பேசாமல் இருப்பது நல்லது.
Previous Post Next Post


Put your ad code here