யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளான்.

பருத்தித்துறை , தும்பளை பகுதியை சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை - கொடிகாமம் வீதியில் , கொடிகாமத்தில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , இளைஞனின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த கொடிகாம பொலிஸார் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here