ஊடகவியலாளர் நடேசனின் 16ஆவது நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில்


மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள், கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன், 2004ம் ஆண்டு மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இதேவேளை யாழ்.ஊடக அமையத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் சீருடையிலும் , சிவில் உடையிலும் குவிக்கப்பட்டு இருந்ததுடன் , பொலிஸ் அதிகாரியொருவரும் சிவில் உடையில் வந்த ஒருவரும் ஊடக அமையத்தின் வந்து ஊடகவியலாளர் ஒருவரிடம் நிகழ்வு தொடர்பில் கேட்டறிந்து விவரங்களை பதிவு செய்து சென்றுள்ளனர்.









Previous Post Next Post


Put your ad code here