வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு மாதந்தம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் தொடர்பில் 44 ஆயிரத்து 767 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான பணிக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளை பரிசீலிக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ச தலைமையிலான அந்தப் பணிக்குழு தெரிவித்துள்ளது.
“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தப்பட்ட கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 5 ஆயிரம் ரூபாய் உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.
அதில் கிராம அலுவலர்கள் மற்றும் சமுர்த்தி அலுவலர்களால் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவே 44 ஆயிரத்து 767 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த முறைப்பாடுகளில் களுத்துறை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்து மேற்பட்ட முறைப்பாடுகளும் கொழும்பு மாவட்டத்திலிருந்து 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன” என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான பணிக்குழு தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news