Saturday 30 May 2020

டுவிட்டர் பயனர்களுக்கு மற்றுமொரு புதிய வசதி

SHARE

முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் பயனர்களுக்கு மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி போஸ்ட்களை அட்டவணைப்படுத்தி (Schedule) வெளியிடக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டுவீட் ஒன்றினை உருவாக்கும்போது கலண்டர் ஐகான் ஒன்று காண்பிக்கப்படும்.

இதில் போஸ்ட் டுவீட் செய்யப்படவேண்டிய திகதி, நேரம் என்பவற்றினை தெரிவு செய்துகொள்ள முடியும்.

இதனை அடுத்து தெரிவு செய்யப்பட்ட கால நேரத்திற்கு அமைவாக போஸ்ட் ஆனது டுவீட் செய்யப்படும்.

இதன் மூலம் பயனர்கள் தமது போஸ்ட்களை இலகுவாக கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வசதியானது ஏற்கனவே பேஸ்புக்கில் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE