குருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்


வடமேற்கு மாகாணத்தில் குருணாகலில் மாவத்தகம பகுதியிலுள்ள பல விவசாய நிலங்களை இலட்சக்கணக்கான வெட்டுகிளிகள் தாக்கியுள்ளன.

இலங்கையில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இந்தியா, பாகிஸ்தானை தாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என்றும் அவை உள்ளூர் வெட்டுக்கிளிகளே என்றும் விவசாயப் பணிப்பாளர் நாயகம் எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், வெட்டுக்கிளிகளின் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாலைவன வெட்டுக்கிளிகள் மிகப்பெரியது மற்றும் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா போன்ற பலவீனமான உணவுப் பாதுகாப்பு உள்ள நாடுகளில் பயிர்களை அழித்துள்ளன.

பாலைவன வெட்டுக்கிளிகள் மிகவும் அழிவுகரமான புலம்பெயரும் பூச்சிகளில் ஒன்றாக கருதப்படுகின்றன.

அவைகள் ஒவ்வொரு நாளும் 150 கிலோ மீற்றர் காற்றோடு பறந்து சுமார் மூன்று மாதங்கள் உயிர்வாழக் கூடியன எனத் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here