யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
முல்லைத்தீவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.
பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 43 பேருக்கான மேற்கொள்ளப்பட்டன.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 6 பேர், வவுனியா பொது வைத்தியசாலை 3 பேர், சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை 2 பேர், ஊர்காவற்துறை ஆதாரவைத்தியசாலை ஒருவர், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையம் 11 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு 14 பேர், வவுனியா தனிமைப்படுத்தல் மையம் 6 பேர் உள்ளிட்ட 43 பேருடைய மாதிரிகள் பரிசோதனைக்கு உடுத்துக் கொள்ளப்பட்டது.
இவர்களில் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.