வடமராட்சியின் மூத்த குடிமகள் 103 வயதில் காலமானார்


வடமராட்சியில் கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உடுப்பிட்டி பகுதியில் 103 வயது வரை இருந்த மூதாட்டி  30.05.2020 அன்று காலமானார்.

சென்ற வருடம் ஆகக்கூடுதலான வயதில் இருப்பவர் என்ற நிலையில் தெரிவுசெய்யப்பட்டு கரவெட்டி பிரதேச செயலக சமூக சேவை பகுதியினர் மூலம் பரிசளிப்பு விழா இடம்பெற்று அவருக்குரிய பரிசு காசோலையை சமூக சேவை பகுதி உத்தியோகத்தர் ஸ்ரீவரத பாஸ்கரன் அவர்கள் அவருடைய வீட்டில் கொண்டு சென்று வழங்கியிருந்தார்கள்.

தேவன்குறிச்சி இலக்கணத்தை உடுப்பிட்டியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னம்மா 1917.03.17 பிறந்தவர், 30.05.2020. சனிக்கிழமை இறைவனடி சென்றுவிட்டார்.

வடமராட்சிப் பகுதியில் ஆகக்கூடுதலான வயதில் இதுவரையும் இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post


Put your ad code here