அடுத்த மாதம் மணமுடிக்க இருந்தவர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து மரணம்..!!!


திருமணத்திற்கு முன்னரான புகைப்படப் பிடிப்பின் போது லக்கல சேரஎல்ல நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் நீரில் மூழ்கிய யுவதி காப்பாற்றப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள திருமணத்திற்கு முன்னேற்பாடாக புகைப்படம் எடுப்பதற்கு நேற்று லக்கல செரஎல்ல நீர்வீழ்ச்சிக்கு இவர்கள் இருவரும் சென்றிருந்தனர்.

புகைப்படம் எடுக்கும் போது இவர்கள் இருவரும் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்துள்ளனர்.

அருகிலிருந்தவர்கள் யுவதியை காப்பாற்றியுள்ளதுடன் இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இளைஞனை தேடும் பணிகள் நேற்று இடம்பெற்றதோடு நேற்று பிற்பகல் சடலம் மீட்க்கப்ட்டது.குருணாகலையை சேர்ந்த 27 வயது இளைஞரே இவ்வாறு இறந்துள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணை நடத்துகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here