தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்..!!!


கண்டி தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணைத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (31) காலையும் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார்.

அதனை வழமைக்கு கொண்டுவந்ததன் பின்னர் இன்று பிற்பகல் மீண்டும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேற்கொண்டுவருவதாக தலதா மாளிகையின் தியவடன நிலமே தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here