
யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் , தொண்டு நிறுவனம் ஒன்றிடம் துவிச்சக்கர வண்டிகள் உள்ளதாகவும் , அவற்றை குறைந்த விலையில் பெற்று தருவதாகவும் , ஒருவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பில் பணம் கொடுத்து ஏமாந்த நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.