தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக கொறடா பதவியை நிச்சயம் ஏற்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவிப்பு..!!!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக கொறடா பதவியை நிச்சயம் ஏற்பேன் என யாழ் மாவட்ட பாராளுமன்றம் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கெப்பிடெல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் கொறடா ஆகிய இரண்டு பகுதிகளையும் தமிழரசுக் கட்சியினரே வைத்திருந்ததாகவும், இப்போது ஏனைய இரண்டு கட்சிகளுக்கும் கொடுப்பதில் எந்தவித தவரும் இல்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதை நல்ல விடையமாகவே தான் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய போது சிலர் தங்களிடம் கூட்டமைப்பு என்ன செய்தது என கேட்டதாகவும், ஆனால் இனிமேல் அனைவரிடமும் இவ்வாறான கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முதல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இருக்கும் போது அவருக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இருக்கவில்லை எனவும் அது புலிகள் இருந்த காலம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here