யாழில் 24 மணி நேரத்தில் 84 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி..!!!


யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சூரியராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..
கடந்த 24 மணித்தியாலநேரத்தில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 84 மில்லி மீற்றர் மழை வீழ்சியானது யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

வீசிய கடும் காற்றின் காரணமாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சரவணபவானந்த வித்தியாலயத்தில் மரம் முறிந்து விழுந்து வகுப்பறை சேதமடைந்துள்ளது குறித்த மரமானது யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளது.

எனினும் கடந்த 24 மணித்தியாலத்திற்கு வளிமண்டல திணைக்களத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுக்கப்பட்ட சிகப்பு எச்சரிக்கையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்தவித அனர்த்தங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here