களுத்துறை பயாகல ரயில் கடவையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கடந்துசென்ற தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தனியார் பஸ் சாரதியும், நடத்துனரும் ரயில் வருவதற்கான சமிக்ஞை காண்பிக்கப்பட்ட போதிலும் அதனை மீறி ஆபத்து தெரிந்தும் பயணிகளுடன் கடவையை கடந்துசென்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பதிவாகிய காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதனையடுத்து பொலிஸார் குறித்த இருவரையும் இன்று கைது செய்தனர்.
Tags:
sri lanka news