நாட்டில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்வது குறித்த பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இறைச்சிக்காக மாடு அறுப்பதை தடுக்க பிரதமரால் முன்வைக்கப்ட்ட யோசனை தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை சட்டமாக்குவது ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இன்று குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமையவே நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது குறித்த பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.