தேங்காய் ஒன்றின் அதிகூடிய விலையாக 60 ரூபாய் தொடக்கம் 70 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த விலை நிர்ணயம் இன்று (25) தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு ஊடாக இந்த விலை நிர்ணயம் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
