க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் இருந்து 116 பரீட்சை நிலையங்களிலும் 20 ஆயிரத்து 325 மாணவர்கள் தோற்றவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
இவர்களில் 16 ஆயிரத்து 949 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 3 ஆயிரத்து 379 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.
இதேநேரம் 11ஆம் திகதி நடைபெறும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் 212 பரீட்சை மண்டபங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.