இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,448 ஆக அதிகரிப்பு..!!!


மினுவாங்கொடை  பிரண்டிக்ஸ்  ஆடைத் தொழிற்சாலை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய மேலும் ஆறு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் நான்கு ஊழியர்களும், வெலிசறையில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவரும் மற்றும் பணடாரநாயக்க சர்வதேச விமான நிலைய துப்புரவுப் பணியாளர் ஒருவரும் இறுதியாக பதிவான கொரோனா தொற்றாளர்கள் ஆவர்.

முன்னதாக குறித்த ஆடைத் தொழிற்சாலையின் 190 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக இன்றைய தினம் உறுதி செய்யப்பட்டிருந்தன.

தற்போது மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணி பரவலில் மொத்தமாக 1,028 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மினுவாங்காடை ஆடைத் தெழிற்சாலையில் 729 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை நேற்றைய தினம் கண்டறியப்பட்டது.

இந் நிலையில் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,448 ஆக உயர்வடைந்துள்ளதுடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆக 3,274 பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணி பரவலுடன் தொடர்புடைய சுமார் 4,000 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here