தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்த போதும் 488 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 897 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 4 ஆயிரத்து 818 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 46 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3 ஆயிரத்து 14 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 570 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 2 ஆயிரத்து 531 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 439 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 2 ஆயிரத்து 325 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதோடு மன்னார் மாவட்டத்திலே 2 ஆயிரத்து 107 மாணவர்கள் விண்ணப்பித்தபோதும் ஆயிரத்து 961 மாணவர்கள் மட்டுமே பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
