Sunday 11 October 2020

முகக்கவசம், சமூக இடைவெளி பேணாவிடின் 6 மாதம் சிறை, 10 ஆயிரம் ரூபா அபராதம்..!!!

SHARE


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொரோனா வைரஸ் பரவக்கூடிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்ற பிரதேசங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாதோருக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .

இதனடிப்படையில் தொற்றுநீக்க சட்டத்தை மீறினால் 6 மாதம் சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என  சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனவே சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் குறித்த பிரதேசங்களில் முகக்கவசம் அணியாமலிருப்போர், சமூக இடைவெளியைப் பேணாதோர் உள்ளிட்டவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

SHARE