மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 69 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
மினுவாங்கொட, திவுலபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 150 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தொழிற்சாலையின் ஆயிரத்து 400 ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் சோதனைகள் இன்று நடத்தப்படும்.
ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள்.
கடந்த சில நாள்களாக தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றிருந்தால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.