மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் நேர்ந்த விபரீதம்..!!!

 


ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் மல்லியப்பு சந்தி பகுதியில் இன்று (12.10.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  

அவர் சிகிச்சைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற காருடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் இருவரும் வேகமாக பயணித்துள்ளனர். இதனையடுத்து இரு சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் ஒரு மோட்டார் சைக்கள் காரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் காரும், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன. இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தப்பிச்சென்றுள்ள நிலையில் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

Previous Post Next Post


Put your ad code here