Sunday 11 October 2020

களனி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா..!!!

SHARE


களனி பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று களனிப் பல்கலைக்கழக ஊடகப் பேச்சாளர், பேராசிரியர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்தார்.

சமூக அறிவியல் பீடத்தின் மாணவிக்கே கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர் மினுவாங்கொடயில் வசிப்பவர், அவரது தந்தை மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர் என்று பேராசிரியர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்தார்.

தந்தை மற்றும் அவரது மகளான பல்கலைக்கழக மாணவிக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, தாய் மற்றைய சகோதரிக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவியுடன் தங்கியிருந்த மற்ற இரண்டு மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

களனிப் பல்கலைக்கழகம் கடந்த 4ஆம் திகதி மூடப்பட்டது. எனினும் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகத்திற்கு வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதேவேளை, அண்மைய நாள்களில் பல்கலைக்கழகத்திலிருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் வைரஸால் பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பேராசிரியர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்தார்.

SHARE