Saturday 10 October 2020

ஐபோனில் மின்கலப் பிரச்சினையா? இதை செய்து பாருங்கள்..!!!

SHARE


ஐஒஎல் 14 இன்ஸ்டோல் செய்தவர்கள் தங்களின் சாதனத்தில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டால் இதை மட்டும் செய்யுங்கள் என அப்பிள் கேட்டுக் கொண்டுள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் 14 கடந்த மாதம் வெளியிடப்பட்டது. மற்ற அப்டேட்களைப் போன்றே புதிய அப்டேட்டையும் இன்ஸ்டோல் செய்ய முடியும். இந்த அப்டேட் ஐபோன் மற்றும் ஐபேட் மாதிரிகளுக்கு வெளியிடப்பட்டது.

புதிய ஓஎஸ் வெளியான குறுகிய காலகட்டத்துக்குள் அப்பிள் மற்றொரு அப்டேட்டை 0.1 வெர்ஷனில் வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இது பொதுப்படை மேம்படுத்தல்களை வழங்குகிறது. பிழை திருத்தங்கள் மட்டுமின்றி சில புதிய அம்சங்களும் வழங்கப்படுகின்றன.

அண்மைய ஐஒஎஸ் 14 வெர்ஷனில் பலர் மின்கலம்(பற்றரி) விரைவாக தீர்ந்து போவதாக குற்றஞ்சாட்டினர். பின் ஐஒஎஸ் 14.0.1 வெர்ஷனை அப்பிள் வெளியிட்டது. எனினும், இந்த அப்டேட் வெளியான பின்பும் மின்கலம் தீர்ந்து போகும் பிரச்சினை சரியாகவில்லை என பயனாளிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மின்கலம் தீர்ந்து போகும் பிரச்சினையை சரி செய்ய பயனாளிகள் சாதனத்தை பேக்ட்ரி ரீசெட் செய்ய வேண்டும். வாட்ச் மற்றும் ஐபோன் பயனர்கள் இவ்வாறு செய்யுமாறு அப்பிள் தனது வலைத்தளத்தில் கேட்டுக் கொண்டுள்ளது. சாதனத்தில் உள்ள பிரச்சினையைச் சரி செய்ய ரீசெட் செய்யக் கோரும் வழக்கம் மிகவும் அரிதான விஷயம் ஆகும்.

மின்கலம் சார்ந்த கோளாறு மிகவும் முக்கியமான ஒன்று என்பதால் பயனாளிகள் ரீசெட் செய்வதே நல்ல தீர்வைத் தரும். எனினும், ஐபோனை ரீசெட் செய்வது சற்றே சிக்கலான காரியமாகும்.

SHARE