Saturday 10 October 2020

நாளை பரீட்சை எழுதும் மாணவர்களின் பெற்றோருக்கு பொலிஸார் வழங்கும் அறிவுறுத்தல்..!!!

SHARE


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு நாளை தோற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவரின் அனுமதி அட்டையின் பிரதியை வைத்திருக்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அனுமதி அட்டையின் பிரதியை வைத்திருப்பதன் மூலம் பெற்றோர்கள் பொலிஸ் சோதனைச் சாவடிகள் ஊடாக உடனே செல்ல முடியும் என்று அவர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அனுமதி அட்டையின் போட்டோ பிரதி அல்லது ஸ்கான் செய்யப்பட்ட பிரதி போதுமானதாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய நிலமை குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதற்கேற்ப சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பரீட்சை நிலையங்களுக்கு வெளியே குழுக்களாகச் செல்வதைத் தவிர்க்குமாறு அவர் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையத்தை உறுதிப்படுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அஜித் ரோகண பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.

எவ்வாறாயினும், தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் மாணவருடன் பரீட்சை நிலையத்துக்கு வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE