க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஜனவரி 18ஆம் திகதி ஆரம்பம்..!!!


2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு டிசெம்பர் நடைபெறவிருந்த க.பொ.த. சாதாரண தர பரீட்சை நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் முன்னதாக இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here