இலங்கையில் 27 வயது இளைஞன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!!!


இலங்கையில் கொரோனா தொற்றால் 22ஆவது நபரும் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 27 வயதுடைய ஆண் ஒருவரே நேற்றுமுன்தினம் (31) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 11 ஆயிரத்து 60 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 905 பேர் சுகமடைந்துள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here