Saturday 7 November 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; ஜோ பைடனுக்கு வரலாற்று வெற்றி..!!!

SHARE


உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அவர் 46ஆவது ஜனாதிபதியாகத் தெரிவாகினார்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தத் தேர்தல் வெற்றியை ஏற்காமல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தத் தேர்தலில் ஜனநாயகத்தை ஜனநாயகக் கட்சியினர் திருடிவிட்டனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கடந்த 3ஆம் திகதி நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டனர்.
SHARE