கிளிநொச்சியிலும் மாவீரர் நாளை நினைவு கூர நீதிமன்றம் தடை..!!!


கிளிநொச்சியிலும் மாவீரர் நாளை நினைவு கூர நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியினால் இத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவானது பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு எதிராக பெறப்பட்டு இன்று (20) அவரிடம் பொலிஸாரினால் கையளிக்கபபட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள  கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களை நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது  என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679 /20 என்ற வழக்கின் பிரகாரம் 21.112020 தொடக்கம் 27.11.2020  வரையான நாட்களில் எந்த விதமான அஞ்சலி நிகழ்வுகள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கட்டளையை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பரிசோதகரால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கட்டளையை இன்று காலை 9.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here