கிளிநொச்சியில் டிப்பர் சாரதியின் அசமந்த போக்கினால் சிறுவர் உட்பட மூவர் காயம்..!!!


கிளிநொச்சி ஏ9 வீதி வலயக்கல்வி பணிமனை அருகில் திடீரென டிப்பர் வாகனம் பிரேக் அடித்ததினால்  அதே திசையில் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி டிப்பரின் பின்பகுயில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

பூநகரியிலிருந்து கிளிநொச்சியிலுள்ள  தனது வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்த வேளையில் இன்று (08.11.2020) இரவு 7 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த  சிறுவர் உட்பட மூவர்  காயமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


 

Previous Post Next Post


Put your ad code here