மாவீரர் தின நிகழ்வை தடை செய்யும் வகையில் ஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
இம்மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாளைக் கொண்டாடவுள்ளனர் எனத் தாம் சந்தேகிப்பதாக கருத்திற் கொண்டு இவர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைத் தடை செய்யும் உத்தரவை வழங்கக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் கோப்பாய்ப் பொலீசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்
எதிராளிகளை நாளை (24.11.2020) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு வருகைதந்து தடையுத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு இன்று (23.11.2020) மாலை கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பத்திரிகையாளர்களான தே. பிறேமானந்தன் மற்றும் ,த.காண்டீபன் ஆகியோரே அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பருத்தித்துறை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் மாவீரர் நினைவுகூறலுக்கு தடை கோரி, பொலீசாரால் தொடுக்கப்பட்ட வழக்கிலும் வடமராட்சியைச் சேர்ந்த காண்டீபன் என்ற செய்தியாளருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், பொலீசாரினாலேயே அது மீளப்பெறப் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.