Monday 23 November 2020

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அவசர அறிவிப்பு..!!!

SHARE


வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள தாழமுக்கம், திருகோணமலையிலிருந்து 270 கிலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இந்த தாழமுக்க நிலைமை, எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் தமிழகத்தின் கரையோர பகுதியை நோக்கி நகரும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாழமுக்க நிலைமை காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என திணைக்களம் கூறுகின்றது.

குறித்த பகுதிகளில் 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தின் காற்று வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள தாழமுக்க நிலைமையினால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப் பகுதியில் புத்தளம் ஊடான மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரை கரையோர பகுதிகளிலுள்ள மீனவர்களை, கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலுக்காக சென்றுள்ள மீனவர்களை கரைக்கு வருகைத் தருமாறும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

SHARE