நிவர் புயல் தொடர்பான தற்போதைய நிலவரம்..!!!


வங்காள விரிகுடாவில் உள்ள நிவர் புயலானது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. மிகக்குறைந்த வேகத்தில்( மணிக்கு 6-10 கி.மீ.) நகரும் நிவர் தற்போது (25.11.2020 காலை 5.45 மணி)பருத்தித்துறையில் இருந்து 167 கி.மீ. தூரத்தில் ( புயலின் மையத்தின் வெளிப்பகுதி) கிழக்கு வடகிழக்கு திசையில் காணப்படுகின்றது.

இது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை வரை மழை தொடர்ச்சியாகவும் பரவலாகவும் கிடைக்கும். அவ்வப்போது கன மழை கிடைக்க வாய்ப்புண்டு. நாளை அதிகாலை வரை காற்றும் பலத்த வேகத்தில் வீசும்.
குறிப்பாக கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் உயர்வாக காணப்படும்.
 
- நாகமுத்து பிரதீபராஜா-

Previous Post Next Post


Put your ad code here