Wednesday 11 November 2020

அரச ஊழியர்களின் ஆடையில் மாற்றம்..!!!

SHARE

அடுத்த வருடம் தொடக்கம், அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்று (10) கலந்து கொண்ட அமைச்சர் இதற்குரிய வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் துணையுடன் புதிய ஸ்டைல்களை அறிமுகம் செய்யப் போவதாக அமைச்சர் கூறினார்.

எதிர்காலத்தில், பத்திக் ஆடை வடிவமைப்பாளர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு என்-வி-கியூ சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். துறை சார்ந்தவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறினார்.
SHARE