கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் கோர விபத்து..!!!


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை கொண்டு செல்ல இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தும் தனியார் சொகுசு பஸ்ஸொன்று கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேகமாக பயணித்த இந்த பஸ்ஸானது வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே சாலையின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து 24.7 கிமீ முதல் 24.9 கிமீ வரையான கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இந்த அனர்த்தம் நேற்றிரவு 10.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பஸ்ஸின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான பஸ் பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதடன், விபத்தால் நெடுஞ்சாலைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here