கொவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!!


நாட்டில் கொவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் நாட்டில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

பாணந்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே கொவிட் -19 நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உடற்கூற்றுப் பரிசோதனையில் கோவிட் -19 நோய் காரணமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட – பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 5 வாரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கடந்த ஜனவரி முதல் 14 ஆயிரத்து 715 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 ஆயிரத்து 537 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here