பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருமணத்தின் பின் ஜெயபுரத்தில் வசிக்கும் அவர், தொழில் நிமித்தமாக கொழும்பில் இருப்பவர்.
கடந்த மாதம் 25ஆம் திகதியன்று ஜெயபுரத்திலுள்ள தன்னுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய நாளில் இருந்து அவர் சுய தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளார்.
அவரது மாதிரி இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் கோவிட் -19 நோய் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
