கே.கே.எஸ். கடலில் குளித்த இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு..!!!


காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது -19), மாசிலாமணி தவச்செல்வம் (வயது -19) என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவரது சடலம் நேற்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டது.

மற்றையவரான மாசிலாமணி தவச்செல்வமிம் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இருவரது சடலமும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
Previous Post Next Post


Put your ad code here