நிவர் புயல் தாக்கத்தினால் பருத்தித்துறை, சாவகச்சேரி பிரதேசங்கள் அதிகளவில் பாதிப்பு..!!!


நிவர் புயல் காரணமாக யாழ் மாவட்டத்தில் 5040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (27)  நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிவர் புயல் மற்றும் மழை காரணமாக யாழ் மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 1424குடும்பங்களைச் சேர்ந்த 5040பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடும்  காற்றின்  காரணமாக  யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவினையும்  உள்ளடக்கியதாக  444 வீடுகள் பகுதியளவிலும்,  முழுமையாக 7 வீடுகளும் சேதமடைந்துள்ளன

கடும் மழை மற்றும் காற்றினால் சிறு நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளும் வழங்கப்படுகின்றன.

215 வறிய குடும்பங்களுக்கு தற்காலிக கூடாரங்கள் வழங்கி வருகின்றோம்.

565 வறிய குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்குரிய உணவுப் பொருட்களை வழங்குவதற்குரிய அறிவுறுத்தல்களை  அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு வழங்கியிருக்கின்றோம்.

நிவர் புயல் காரணமாக பருத்தித்துறை உட்பட மருதங்கேணி, சாவகச்சேரி பிரதேசங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here