இலங்கையில் பிறந்து 20 நாள்களேயான குழந்தை கொவிட் – 19 நோயால் உயிரிந்துள்ளது.
கொழும்பு சீமாட்டி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நேற்றிரவு அந்தச் சிசு உயிரிழந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் நிமோனியா காய்ச்சல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிசுவின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய போது, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய் மற்றும் தந்தை இருவரது மாதிரிகளும் பரிசோதனைக்கு உள்படுத்திய போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளதாகவும் சீமாட்டி றிஜ்வே சிறுவர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news
