ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படத்தின் இறுவட்டு வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
கொழும்புத்துறையில் அமைந்துள்ள யோகர் சுவாமி சாமாதி ஆலயத்தில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா ஆவணப்படத்தை வெளியிட்டு வைக்க, சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாதன் சுவாமி ஆகியோர் இறுவட்டுகளைப் பெற்றுக் கொண்டனர்.
மு.சரவணனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பிலும், இ.தனஞ்சயனின் எழுத்து மற்றும் இயக்கத்திலும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.



