நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!


இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்களும் மற்றும் சிறை கைதிகளும் அடங்குவதாக என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 878 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21,861 ஆக அதிகரித்துள்ளது.

Previous Post Next Post


Put your ad code here