எதிர்வரும் 4 முதல் 6 மாதங்கள் கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் கடுமையாக காணப்படும் காலமாக அமையும் என மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட் வைரஸ் தடுப்புக்கான தடுப்பூசி தயாரிப்பிற்காக கேட்ஸ் நிதியத்தினால் பல மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில், மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்திற்கு அடுத்ததாக, கொவிட் தடுப்புக்கான மருந்தை கண்டுபிடிக்க தனது நிதியமே அதிகளவிலான நிதியை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முகக்கவசத்தை அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
Tags:
world news