கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ள தாய் ஒருவர் கொழும்பில் இன்று இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த தாய் ஒருவரே இவ்வாறு இரட்டை குழந்தைகளைப் பிரசவித்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. இது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாய் குழந்தை பிரசவித்துள்ள இரண்டாவது சந்தர்ப்பமாகும்.