மாஸ்க் அணியாத 9 பேருக்கு தண்டம் - யாழில் சம்பவம்..!!!


கொரோனாத் தொற்று பரம்பல் அதிகரித்து வரும் நிலையில் , பொது இடங்களில் முகக்கவசம் அணி யாமல் மற்றும் நாடியில் முகக்கவசத்தை அணிந்து நடமாடிய 9 பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் தண்டம் விதிக்கப்பட்டது.

தொற்று நோயை ஏற்படுத்தக்கூடிய வகையில் நடமாடினார் என குற்றம் சாட்டி சாவகச்சேரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு நேற்று எடுக்கப்பட்டன . குறித்த நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களுக்குத் தண்டம் விதிக்கப்பட்டது .

கொரோனாத் தொற்றை ஏற்படுத்தும் வகையில் முகக்கவசத்தை முறையாக அணியாமல் நடமாடுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வரை தண்டம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமென அரசால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Previous Post Next Post


Put your ad code here