கீரிமலை அந்தியேட்டி மண்டபம், குருக்கள் தனிமைப்படுத்தலில்..!!!


கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கீரிமலை அந்தியேட்டி மண்டபத்திற்கு வந்திருந்த நிலையில், குறித்த மண்டபத்தில் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குருக்கள் மற்றும் பிரதேசசபை ஊழியர்கள் உட்பட சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் ஏழாலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் கடந்த 12ம் திகதி அந்தியேட்டி கடமை ஒன்றை நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு சென்றிருந்தார். இதன்பின்னர் குறித்த நபர் கொரொனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

ஆகவே குறித்த நபர் கீரிமலைக்கு வந்திருந்த நேரத்தில் கீரிமலைப் பகுதியில் வாகன பாதுகாப்பு சாலையில் கடமையில் இருந்த ஒருவர் மற்றும் உள்செல்பவர்களை அனுமதிக்கும் பொருட்டு விபரங்களை சேகரிக்கும் இருவர் என பிரதேச சபை ஊழியர்கள் மூவர் உள்பட அந்தியேட்டி நடவடிக்கை மேற்கொள்ளும் மானிப்பாய் பகுதியை சேர்ந்த குருக்கள் என சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here