இலங்கையில் தபால் பொதிகளை வீடுகளுக்கே விநியோகிக்கும் சேவை இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தபால் பொதிகளை தபால் அலுவலகங்களுக்குச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த நிலையில், இந்தப் புதிய சேவை ஆரம்பிக்கப்படுகின்றது.
ரூபா 50 ஆயிரம் வரை பெறுமதியான பொருட்களை முதற்கட்டமாக வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வீடுகளுக்கு விநியோகிக்கும் பொருட்களின் பெறுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தபால்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tags:
sri lanka news